Thursday, October 15, 2009

நான் காற்று வாங்கப் போனேன்

நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

என் உள்ள என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் உள்ள என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)

படம்: கலங்கரை விளக்கம்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

3 Comments:

சென்ஷி said...

அருமையான பாடல்! மைபிரண்ட் சில எழுத்துப்பிழைகளை திருத்திடுங்க..

//அதைக் கேட்டு வாங்கிப் போனால்//

வாங்கிப் போனாள்

//என் உள்ள என்ற ஊஞ்சல் //

என் உள்ளம் என்ற ஊஞ்சல்

Dr.Rudhran said...

this was written by vaali

பரிசல்காரன் said...

இது வாலி எழுதிய பாடல்!

Last 25 songs posted in Thenkinnam